Published : 09 Sep 2021 03:15 AM
Last Updated : 09 Sep 2021 03:15 AM

பிரதமர் மோடி, அமித்ஷா தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து; நமச்சிவாயத்திற்காக 52 கிலோ கேக் வெட்டி ஆராவாரம்: முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து

புதுச்சேரியில் அமைச்சர் நமச்சிவாயத் துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துநகரெங்கும் அவரது ஆதரவாளர்கள் பேனர்களை அதிகளவில் வைத்திருந் தனர்.

பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

புதுவை மாநில உள்துறை, உள் ளாட்சி மற்றும் கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது ஆதரவா ளர்கள், பாஜகவினர் ஒரு வாரமாக மாநி லத்தில் பல பகுதிகளில் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.

குதிரை பூட்டிய சாரட் வண்டியில் அமைச்சரை அமர வைத்து, நகர்வலம்அழைத்து சென்று கொண்டாடினர். நகரெங்கும் வாழ்த்து பேனர்களைவிதிமீறி அதிகளவில் வைத்திருந்தனர். அதிகாரிகளும் வழக்கம்போல் கண்டுக் கொள்ள வில்லை.

பிறந்தநாள் தினமான நேற்று லிங்காரெட்டிபாளையத்தில் அதி காலையில் அமைச்சர் நமச்சிவாயத்தின் வயதை குறிக்கும் வகையில் கன்றுகளுடன் கூடிய 52 பசுக்களை வைத்து கோ பூஜை நடத்தப்பட்டது. இதில் தனது மனைவி வசந்தி, மகன் சிவஹரியுடன் நமச்சிவாயம் பங்கேற்றார். பின்னர் மணவெளி தட்டாஞ்சாவடியில் உள்ள குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டார்.

பிறந்தநாளையொட்டி அமைச்சர்நமச்சிவாயத்துக்கு பிரதமர் மோடி போனில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் ரங்கசாமியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அமைச்சர் தொகுதியான மண்ணா டிப்பட்டு தொகுதி கொடாத்தூர் மணவெளியில் அமைச்சர் நமச்சிவாயம் பிறந்தநாள் விழாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு52 கிலோ கேக் வெட்டி தொண்டர்க ளுக்கு வழங்கப்பட்டது. பின்னர் அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஆளுயுர மாலை, பண மாலை, சால்வை, பரிசுகள்வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மதியம் நமச்சிவாயம் உணவு பரிமாறி விருந்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். ஆயிரக்கணக்கானோருக்கு வடை, பாயாசத்துடன் விருந்து அளிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x