

பிறந்து 80 நாட்களே ஆன குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டரை லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (செப். 08) வெளியிட்ட அறிவிப்பு:
"தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், அம்பதுமேல் நகரத்தில் வசிக்கும் வசந்த் - அகல்யா தம்பதியினருக்கு பிறந்து 80 நாட்களே ஆன குழந்தை வ.வருண் இருதய அறுவை சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனையில் சேர்த்துள்ள செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.
இந்தக் குழந்தையின் இருதய அறுவை சிகிச்சைக்கு தேவையான இரண்டரை லட்சம் ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்".
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.