

கோடநாடு கொலை, கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளர் மற்றும் இடைத் தரகரிடம் இன்று காலை விசாரணை தொடங்கியது.
நீலகிரி மாவட்டம் கோடநாடு கொள்ளை வழக்கு விசாரணை, உதகையில் உள்ள பழைய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தொடர்ந்து நடந்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களின் தொடர்பில் இருந்த நண்பர்கள் என அனைவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்களை வழங்கிய உரிமையாளர் நவ்ஷத், இடைத் தரகர் நவுஃபுல் ஆகிய இருவரிடம் இன்று விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர்.
அவர்களிடம் டிஐஜி முத்துசாமி, எஸ்பி ஆஷிஸ் ராவத், கூடுதல் எஸ்பி கிருஷ்ணமூர்த்தி, டிஎஸ்பி சுரேஷ், ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.