‘இந்து தமிழ் திசை’, ராவ் மருத்துவமனை நடத்தும் ‘மகளிர் நல வலைத் தொடர்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் நடக்கிறது

‘இந்து தமிழ் திசை’, ராவ் மருத்துவமனை நடத்தும் ‘மகளிர் நல வலைத் தொடர்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி: இன்று மாலை 4 மணிக்கு ஆன்லைனில் நடக்கிறது
Updated on
1 min read

பெண்கள் ஆன்லைனில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராவ் மருத்துவமனை உடன் இணைந்து நடத்தும் ‘மகளிர் நல வலைத் தொடர்’ சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (புதன்) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில், ‘கருவுறாமை காரணங்களும் தீர்வுகளும்’ எனும்தலைப்பில் பெண் கருவுறாமைக்கான காரணங்கள், ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம், தம்பதியருக்கு என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும், ஆண் மலட்டுத்தன்மையைப் போக்க என்ன செய்யலாம் என்பன உள்ளிட்ட பல தலைப்புகளில் புகழ்பெற்ற மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.

இத்துறையில் பல்லாண்டுகால அனுபவமிக்க ராவ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர்ஆஷா ராவ், மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் குறித்தும், ராவ் மருத்துவமனையின் மூத்தஆலோசகர் டாக்டர் தாமோதர்ராவ், கருவுறுதல் மற்றும் மகளிர்மருத்துவம் எண்டோஸ்கோப்பி குறித்தும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனர்.

இந்த நிகழ்வில் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். https://bit.ly/38Mtyew என்ற லிங்க்கின்வழியே நேரடியாகப் பங்கேற்கலாம். கட்டணம் ஏதும் கிடையாது.மேலும் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in