

தமிழகத்தில் கடந்த 1858 முதல் 2005 வரை இயற்றப்பட்டு, வழக்கத்தில் இல்லாத 89 சட்டங்களை நீக்கம் செய்வதற்கான சட்ட மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் வழக்கத்தில் இல்லாத சட்டங்களை நீக்குவதற்கான மசோதாவை பேரவையில் சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த1-ம் தேதி தாக்கல் செய்தார்.
அதன்படி, கடந்த 1858 - தமிழ்நாடு கட்டாய தொழிலாளர் சட்டம், 1866 - தமிழ்நாடு கால்நடை நோய் சட்டம், 1976 - தமிழ்நாடு கூடுதல் விற்பனை வரி சட்டம் மற்றும் வேளாண் விளைபொருள் சந்தை திருத்த சட்டம், பந்தய வரி, மாநகர காவல், பொது விற்பனை வரி உட்பட 89 சட்டங்கள், திருத்தச் சட்டங்களை நீக்குவதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பேரவையில் இந்த மசோதா நேற்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் முறைப்படுத்தல் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.