

இலங்கைக் கடற்படையினரால் மீண்டும் 73 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் வர்ணகுலசூரிய இது குறித்து கூறுகையில், “தலைமன்னார் அருகே 41 மீனவர்களையும், டெல்ஃப்ட் தீவு அருகே 32 மீனவர்களை சனிக்கிழமையன்றும் கைது செய்துள்ளோம்” என்றார்.
மேலும் 15 மீன்பிடிப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.
டெல்ஃப்ட் தீவு அருகே கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். மற்ற மீனவர்கள் தலைமன்னாரில் உள்ள மீன்பிடி கண்காணிப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அதிபர் ராஜபக்ச நல்லெண்ணச் செய்கையாக தமிழக மீனவர்களை விடுவிக்க உத்தரவிட்டார். ஆனால் மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
மீனவர்கள் விவகாரம் குறித்த இந்திய, இலங்கை பேச்சுவார்த்தை மீண்டு இந்த மாதம் நடைபெறுகிறது.