Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது: முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு

விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவ காரத்தில், திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார்.

விழுப்புரம் அருகே கோலிய னூரில் அதிமுக சார்பில் உள்ளாட் சித் தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடை பெற்றது.

சிறப்பு அழைப்பாளராக பங் கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது:

உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்க திமுக முயற்சிக்கிறது. இந்த விவகாரத்தில் திமுக இரட்டைவேடம் போடுகிறது. உச்சநீதிமன் றம் வரை சென்று வாதிட்டவர்கள் இன்று தேர்தலை தள்ளி வைக்கபோராடுகிறார்கள். தற்போதைய திமுக ஆட்சி மக்களுடைய நன் மதிப்பை இழந்துள்ளது. இவ்வளவு சீக்கிரம் அவநம்பிக்கையை பெற்ற அரசு எதுவுமில்லை.

திமுகவைப் போல தேர்தலைக் கண்டு அஞ்சுகிற இயக்கம் அதிமுகஇல்லை. எப்போது தேர்தல் வந்தா லும் சந்திக்கிற இயக்கம் அதிமுக . வலுவான எதிர்க்கட்சியாக, மக்கள் எங்களை அங்கீகரித்துள்ளனர். எப்போதெல்லாம் அதிமுக தோல்விஅடைகிறதோ, அடுத்து மீண்டும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் .

தேர்தல் நேரத்தில் 506 வாக் குறுதிகள் கொடுத்த திமுக, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற மனமில்லை. கருணாநிதி ஆட்சி காலத்தில் 2 ஏக்கர் நிலம் தருவ தாகக் கூறி மக்களை ஏமாற்றினார். 83 லட்சம் பேருக்கு 1 கோடியே 66 லட்சம் ஏக்கர் நிலம் தேவை. மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வர வேண்டும் என்று கருணாநிதி அப்போது செய்ததை, அவரது மகன் ஸ்டாலின் தற்போது செய்துவருகிறார். கல்விக் கடன், நகைக்கடன், சிலிண்டர் மானியம் இவைக ளில் அதிகாரம் இல்லாதபோது வாக்குறுதிகளை அளித்தது ஏன்? பெட்ரோல் விலையைக் குறைத்து, டீசல் விலை குறைப்பில் மக்களை ஸ்டாலின் அரசு ஏமாற்றியுள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்ட மாணவர்களுக் காக கொண்டு வரப்பட்ட ஜெயல லிதா பல்கலைக்கழகத்தை திமுகவி னர் மூடிவிட்டனர். சிதம்பரம் அண் ணாமலை பல்கலைக்கழகம் ஏற் கெனவே சீரழிந்துள்ளது. அதோடு இணைக்கிறார்கள். படித்த பட்டதாரி மாணவர்களுக்கு 5 ஏக்கர் நிலத்தில் ரூ. 50 கோடி மதிப்பில் விழுப்புரத்தில் கொண்டு வர திட்டமிட்ட டைடல் பார்க்கை புதுச்சேரி அருகே கொண்டு சென்றுள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் வெற்றி தான் அதிமுகவின் அடுத்தடுத்த வெற்றிகளுக்கான படிகளாக இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கோலியனூர் தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சுரேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற இக்கூட் டத்தில் ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், ராமதாஸ், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞரணி செயலாளர் பசுபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x