Published : 08 Sep 2021 03:17 AM
Last Updated : 08 Sep 2021 03:17 AM

கருவேல மரங்களால் மாயமான வைகை ஆறு: நீர் ஆதாரங்கள் பராமரிப்பில் பொதுப்பணித் துறை அலட்சியம்

விளாங்குடி வைகை ஆற்றில் காடுபோல வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்கள்.

மதுரை

பொதுப் பணித் துறையினர் அலட் சியத்தால் சீமைக் கருவேல மரங் கள் வளர்ந்து, மதுரையில் வைகை ஆறு இருப்பதே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரையின் ஒரே நிலத்தடி நீர் ஆதாரம் வைகை ஆறு மட்டுமே. கடந்த காலத்தில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் மதுரை மட்டு மில்லாது தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட் டங்கள் வைகை ஆற்றையே நம்பி இருந்தன.

தற்போது திண்டுக்கல், சிவகங் கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கூட அந்தந்த மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகளை சீரமைத்து, மழைநீரைச் சேமிக்க ஏற்பாடு செய் துவிட்டனர். மேலும், ஆற்றிலும் ஆண்டுக்கு ஓரிரு முறை மட்டுமே இந்த மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக் கப்படுகிறது. அந்த தண்ணீரும் முறையாகச் சென்றடைவதில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். கடந்த கால் நூற்றாண்டாக வறண்ட வைகை ஆற்றில் மணல் திருட்டு தாராளமாக நடந்ததால், ஆற்றுப்படுகைக்கான அடையாளம் வழிநெடுகிலும் அழிக்கப்பட்டுள்ளது. அதனால், ஆற்றில் திறந்துவிடப்படும் தண் ணீர் உருண்டோடாமல் நீர் பிடிப்பு இல்லாத நிலையே உள்ளது.

இந்நிலையில் மதுரை மாநக ருக்குட்பட்ட வைகை ஆற்றில் நகரின் பல்வேறு இடங்களில் இருந்து கழிவுநீர் கலக்கிறது. அதனால், ஆற்றில் ஆகாய தாமரைச்செடிகள், சீமை கருவேல மரங்கள் ஆற்றின் வழித்தடங்களை முழுமையாக ஆக்கிரமித்துள்ளன.

இதனால் மழைக்காலங்களில் ஆற்று மணலில் கிடைத்த நீர் ஊற்றுகள் வறண்டு போய்விட்டன.

இதுகுறித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் கூறியதாவது: மதுரையில் பெரும்பாலான இடங்களில் வைகை ஆறே தெரியாத அளவுக்கு சீமைக் கருவேல மரங்கள் ஆக்கிரமித்துள்ளன. இதன் வேர் 7 அடி வரை செல்கிறது. இந்த மரங்கள் காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சும். இந்த மரங்களை முறையாக அகற்றாவிட்டால் பரவிக்கொண்டே வரும். கடந்த காலத்தில் உயர் நீதிமன்றம் உத்தர விட்டதும், வைகை ஆற்றில் சீமைக்கருவேல மரங்களை அரைகுறையாக பொதுப்பணித் துறையினர் அகற்றினர்.

அதனால், தற்போது மீண்டும் சீமைக்கருவேல மரம் வளர்ந்து காடு போல ஆக்கிரமித்துள்ளது. ஆற்றில் கழிவுநீர் கலப்பதால் மரங்களை முழுமையாக அகற்ற முடியவில்லை. மற்ற அனைத்து வகை மரங்களையும் கருவேல மரங்கள் அழித்துவிடும். அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சி விடும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x