

திருச்சி, கோவை, மதுரையை தொடர்ந்து ‘தி இந்து - பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பாக நடத்தப்படும் மகளிர் திருவிழா சென்னையில் இன்று நடைபெறுகிறது. அண்ணா நகர் எஸ்பிஓஏ ஜூனியர் காலேஜ் கலையரங்கத்தில் நடக்கும் இந்த மகளிர் திருவிழாவில் 18 வயதுக்கு மேற்பட்ட வாசகிகள் அனைவரும் கலந்துகொள்ளலாம்.
தமிழகத்தின் பல நகரங் களிலும் ‘தி இந்து’ வாசகர் திருவிழா கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அது போல, ‘தி இந்து’வின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் வாசகி களுக்காக மகளிர் திருவிழா நடத்தப்படுகிறது. வாசகிகளின் பல்வேறு திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் வகையில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், மகளிர் முன்னேற் றத்துக்கு உதவும் பல்வேறு சொற்பொழிவுகளும் விழாவில் இடம்பெறும். கலகலப்பான போட்டிகள், கலந்துகொள்ளும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் என மகளிர் திருவிழா சென்னை வாசகிகளை உற்சாகப்படுத்த உள்ளது.
காலை 9.30 மணி முதல் மதியம் வரை நடைபெறும் கருத்தரங்கில் பல துறைகளை சேர்ந்த சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு வாசகிகளுடன் உரையாட உள்ளனர். பெண்களுக்கு துணை நிற்கும் சட்டங்கள் பற்றி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனைவர் எஸ்.விமலா ஆலோசனை வழங்குகிறார். பெண்கள் முன்னேற்றம் பற்றி சத்யபாமா பல்கலைக்கழக நிர்வாக இயக்குநர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் பேசுகிறார். மனநலம் பற்றி டாக்டர் எஸ்.தேன்மொழி கலந்துரையாடுகிறார். சைபர் கிரைம் விழிப்புணர்வு குறித்து தடயவியல் துறை முன்னாள் ஆய்வாளர் ஆர்.வரதராஜ் ஆலோசனை வழங்குகிறார். வீட்டில் இருந்தபடியே கணினியில் கைநிறைய சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் பற்றி காம்கேர் சாப்ட்வேர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ‘காம்கேர்’ புவனேஸ்வரி பேசுகிறார்.
விழாவில் கலந்துகொள்ளும் வாசகிகள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, வாசகிகளுக்கான பல்வேறு சுவாரஸ்யமான போட்டிகள், நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.
மகளிர் திருவிழாவை ‘தி இந்து’வுடன் இணைந்து லலிதா ஜுவல்லரி, லியோ காபி, ஹார்லிக்ஸ் ஓட்ஸ், பிருத்வி உள்ளாடைகள், ஆரெம்கேவி, ஹெல்த் பேஸ்கட், ப்ரேலேடி குக்கிங் வேர்ஸ், க்ரியா சாரீஸ், மீகா ஃபூட்ஸ், பொன்வண்டு, எஸ்பிஐ ஹோம் லோன்ஸ், நேச்சுரல்ஸ், குளோபல் இன்னோவேட்டிவ்ஸ், மந்தரா, அபி எஸ்டேட்ஸ், தனலஷ்மி சீனிவாசன் காலேஜ் ஆஃப் இன்ஜினீயரிங் அண்ட் டெக்னாலஜி, பிகாஜி ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன. அனுமதி இலவசம்.