

கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண் டானா அருகில் நகர திமுக சார்பில் நேற்று முன்தினம் இரவு பொதுக்கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு நகரச் செயலாளர் நவாப் தலைமை வகித்தார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், திமுகவின் தலை மைக் கழக முதன்மைச் செய லாளருமான துரைமுருகன் பேசியதாவது:
ஜனநாயக நாட்டில் ஆளும் கட்சி எதிர்கட்சி ஆவதும், எதிர் கட்சி ஆளுங்கட்சியாவதும் இயல்பானது. அப்போதுதான் அந்த நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியும். அதன்படி பார்த்தால் வரும் தேர்தலில் தற் போது உள்ள ஆட்சியை வீழ்த்தி விட்டு திமுக ஆட்சி அமைக்கப் போவது நிச்சயம்.
தமிழகத்தில் இருந்து பெரிய நிறுவனங்கள், ஆந்தி ராவை நோக்கிச் செல்கின்றன. தமிழகத்தில் போக்குவரத்து நெரிசல் காரணமாக துறை முகத்துக்குக் கண்டெய்னர்கள் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால், கார்களை ஏற்றிச் செல்லும் கண்டெய்னர் லாரிகள் அனைத்தும் ஆந்திராவில் எல் அண்ட் டி-க்கு சொந்தமான துறைமுகத்துக்குச் செல்வதாகச் சொல்லப்படுகிறது. எனவே, மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வில்லை என்றால் சென்னை துறைமுகத்தை 3 மாதத்தில் மூடிவிடுவார்கள் என்பதுதான் உண்மை. தேர்தலின் போது அரசு ஊழியர்களின் குறைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து வைப்பேன் என ஜெயலலிதா கூறினார். ஆனால், இன்றைக்கு 4 லட்சம் அரசு ஊழி யர்கள் சாலையில் குவிந்து போராடுகிறார்கள். அவர்களை அழைத்து முதல்வர் ஜெயலலிதா ஏன் இதுவரையில் பேசவில்லை?
ஓடும் வண்டியில்தான் நாம் ஏறவேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். எனவே மீண்டும் தலைவர் கருணாநிதி தலைமையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சி அமைக்கும் என்பது உறுதி. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுகவனம், மேற்கு மாவட்டச் செயலாளர் பிரகாஷ், தருமபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, கிழக்கு மாவட்ட அவைத் தலை வர் செங்குட்டுவன் எம்எல்ஏ உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.