

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த ரூ.8 ஆயிரத்துடன், தனது சொந்தப் பணத்தையும் சேர்த்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு கள்ளக்குறிச்சி ஆசிரியர் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேற்று வழங்கினார்.
இவ்விழாவில் ஆட்சியர் பேசுகையில், “ஆசிரியர் பணி என்பது அறப்பணியோடு அர்ப்பணிப்பு பணியாகும். தன்னலமற்ற சேவையோடு பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளுடன் இணைத்து நீர் மேலாண்மை, சுற்றுப்புற மேலாண்மை குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.மாணவர்களின்பெற்றோர்களும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாணவர்களிடம் ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.
இந்நிலையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற சின்னியந்தல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஷேக் ஜாகீர் உசேன்,விருதின் மூலம் பெற்ற ரூ.8,000 -க்கான காசோலையுடன் ரூ.2 ஆயிரம் சேர்த்து ரூ.10,000-ஐ முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.
முன்னதாக, முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி வரவேற்புரையும், பின்னர், கள்ளக்குறிச்சி மாவட்டக் கல்வி அலுவலர் க.கார்த்திகா நன்றியுரையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் டி.சுரேஷ் உள்ளிட்ட கல்வித்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
ரூ.10,000-ஐ முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்.