Published : 25 Feb 2016 09:15 AM
Last Updated : 25 Feb 2016 09:15 AM

சமூக நீதியை உறுதி செய்கிறது இந்திய அரசியல் சாசனம்: முன்னாள் நீதிபதி சந்துரு உரை

சமூக நீதியை உறுதி செய்யும் கருவியாக அரசியல் சாசனம் விளங்குவதாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு தெரிவித்தார்.

உலக சமூகநீதி நாளை முன் னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனத்தில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் ‘சமூக ஒருங்கிணைப்பு மற்றும் சமூக நீதி’ என்ற தலைப்பில் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு கருத்துரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்திய அரசியல் சாசனத்தில் சமூகம், சமத்துவம், ஜனநாயகம், பொதுவுடமை கருத்துகள் பின்னிப் பிணைந்துள்ளன. அதே சாசனத்தின் முன்னுரையில் சமூக நீதி உறுதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக அரசியல் பிரிவுகள் 15,16, 21ஏ, 25, 39, 51ஏ ஆகியவை சமூக ஒருங்கிணைப்பை தெளிவாக விளக்குகின்றன.

மேலும், அனைவருக்கும் கல்வி, இடஒதுக்கீடு, உள்ளாட்சி அதிகாரங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அரசியல் சாசனம் திகழ்கிறது. இவை சமூக நீதியை உறுதி செய்கின்றன. தொழில்நுட்ப வளர்ச்சி சமூக ஒருங்கிணைப்பை உறுதி செய் யாது. அதற்கு மாறாக மனிதன் மனம் மாற வேண்டும். ராஜீவ்காந்தி நிறுவன இயக்குநர் லதா பிள்ளை, பதிவாளர் தேவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x