தென் மேற்கு பருவ மழை விரைவில் தொடங்கும்

தென் மேற்கு பருவ மழை விரைவில் தொடங்கும்
Updated on
1 min read

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “பொதுவாக ஜூன் மாத முதல் நாள் துவங்கும் தென் மேற்கு பருவ மழை இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ளது. இதனால் தமிழகத்தில் வெப்பம் குறைந்து குளிர் காற்று வீசும். தற்போது சூரியனின் நிலை மேல் நோக்கி சென்றுள்ளதால் வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு குறைய வாய்ப்புள்ளது” என்றார்.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று பல இடங்களில் வெயில் அதிகமாக காணப்பட்டது. வேலூரில் அதிகபட்சமாக 105. 8 டிகிரி வெயில் பதிவானது. சென்னை விமான நிலையத்தில் 104 டிகிரி, கூடலூர் மாவட்டத்தில் 103.46 டிகிரி,பாளையங்கோட்டை மாவட்டத்தில் 103.28 டிகிரி, திருச்சி மாவட்டத்தில் 102. 92 டிகிரி, மதுரை மாவட்டத்தில் 102. 56 டிகிரி, கரூர் மாவட்டம் பரம்மத்தியில் 102 டிகிரி வெயில் பதிவானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in