

புதுச்சேரி காவல் துறையில் எஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் திருகோட்டி பைரவசாமி (59). இவர், கடந்த 1982-ல் எஸ்ஐயாக பணி தொடங்கினார். கடந்த 8-ம் தேதி எஸ்பி பணியில் இருந்து, விருப்ப ஓய்வில் செல்ல புதுச்சேரி அரசுக்கு மனு அளித்திருந்தார். இதற்கு அரசு உடனடியாக அனுமதி தந்தது.
இதையடுத்து, புதுச்சேரி பிராந் தியங்களில் ஒன்றான ஆந்திரம் அருகே உள்ள ஏனாமில் ஆளுங் கட்சியான என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் களமிறங்க திட்டமிட்டு அவர் காய் நகர்த்தி வருகிறார். இது தொடர்பாக போலீஸ் மற்றும் கட்சி வட்டாரங்கள் கூறும்போது, "ஏனாம் காங்கிரஸ் எம்எல்ஏவான மல்லாடி கிருஷ்ணாராவ் ரங்க சாமிக்கு ஆதரவாக செயல்பட்ட போதிலும் அவருக்கு மாநிலங் களவை உறுப்பினர் பதவி கிடைக் காததால் ஒதுங்கினார். காங்கிரஸி லும் சீட் கேட்கவில்லை. இதை பயன்படுத்தி மல்லாடி கிருஷ்ணா ராவ் உறவினரான பைரவசாமி ஏனாமில் போட்டியிடுவதற்காக வரும் ஜூன் மாதம் ஓய்வு பெற இருந்த நிலையில், தற்போதே விருப்ப ஓய்வு கேட்டுப் பெற்றுள் ளார்” என்று தெரிவித்தனர்.