

சென்னை அருகே வண்டலூரில் நடைபெற்று வரும் பாமக மாநாட்டு பணிகளை பார்வையிட்ட அன்புமணி ராமதாஸ், 150 தொகுதிகளை கைப்பற்றுவோம் என நம்பிக்கை தெரிவித்தார். ‘அதிமுக, திமுக தவிர வேறு எந்தக் கட்சியாக இருந்தாலும் பாமக கூட்டணியில் சேர்த்து கொள்ளப்படும். 2.5 கோடி வாக்காளர்கள் பாமகவுக்கு வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளதால், வரும் தேர்தலில் 150 தொகுதிகளை பாமக கைப்பற்றும். மாநாடு முடிந்த பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்’ என்று அவர் கூறினார். வரும் 27-ம் தேதி வண்டலூரில் பாமக மாநாடு நடைபெற உள்ளது.