பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த செவிலியர்கள் மீண்டும் உண்ணாவிரதம்: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி

பணி நிரந்தரம் செய்யக் கோரி ஒப்பந்த செவிலியர்கள் மீண்டும் உண்ணாவிரதம்: 2 பேர் மருத்துவமனையில் அனுமதி
Updated on
1 min read

சுகாதார அதிகாரிகள் உறுதி யளித்தபடி, ஒப்பந்த செவிலியர் களை பணி நிரந்தரம் செய்யாத தால், செவிலியர்கள் சங்கம் சார்பில் மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதில் 2 செவிலியர்கள் மயங்கி விழுந் ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் 3,447 ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்கள் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் கடந்த மாதம் 29-ம் தேதி காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கப்பட்டது. இதில் 500-க்கும் மேற்பட்ட செவிலி யர்கள் பங்கேற்றனர்.

3-வது நாள் போராட்டத்தின் போது, செவிலியர்களிடம் சுகாதாரத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ‘முதல் கட்டமாக 806 ஒப்பந்த செவி லியர்கள் பணி நிரந்தரம் செய்யப் படுவார்கள். எஞ்சியவர்கள் 10 நாட்களில் பணி நிரந்தரம் செய் யப்படுவார்கள்’ என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

2 வாரங்களுக்கு மேல் ஆகி யும், யாரும் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. சட்டப் பேரவையிலும் இதுகுறித்த அறி விப்புகள் வெளியாகாததால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஒப்பந்த செவி லியர்கள் நேற்று மீண்டும் தொடங் கினர்.

தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நடக்கும் இப்போராட் டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பங்கேற் றுள்ளனர். உண்ணாவிரதப் பந்த லில் 2 செவிலியர்கள் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் ராயப் பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in