

அவிநாசி-அத்திக்கடவு திட் டத்தை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் 7-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. இதையொட்டி, அவிநாசியில் நேற்று மாலை நீண்ட மனிதச் சங்கிலிப் போராட்டம் நடந்தது.
அவிநாசி-அத்திக்கடவு திட் டத்தை நிறைவேற்றக்கோரி, அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே 14 பேர் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள் ளனர்.
கடையடைப்பு
சேவூர், கருவலூர் உள்ளிட்ட பகுதிகளில் இப்போராட்டத்துக்கு ஆதரவாகவும் திட்டத்தை நிறை வேற்றக் கோரியும் வணிக நிறுவ னங்கள் மூடப்பட்டு நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலவரையற்ற உண் ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள 14 பேரும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தை நேற்று தொடர்ந்தனர். அவிநாசியில் நேற்று உண்ணாவிரதப் பந்தலுக்கு, பொதுமக்கள் அதிகளவில் திரண் டனர்.
நடைபயணம்
தெக்கலூரில் இருந்து நடை பயணம் மற்றும் வாகனப் பேரணி யாக வந்து, மாலை நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள், சமூக ஆர்வலர்கள் பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
கவனஈர்ப்பு தீர்மானம்
அவிநாசி புதிய பேருந்து நிலை யத்தில் தொடங்கிய போராட்டம் அவிநாசி கோவை நெடுஞ்சாலை பழைய பேருந்து நிலையம், சேவூர் சாலை பிரிவு வரை மிக நீண்ட மனிதச்சங்கிலி போராட்ட மாக அமைந்தது. இதில், வால் பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுமுகம் பேசினார். போராட்டக் காரர்களிடம், ‘உங்களின் உணர்வு களை பிரதிபலிக்கும் வகையில், பிப்.16-ம் தேதி நடைபெறும் இடைக் கால பட்ஜெட் சட்டப்பேரவைத் தொடரில் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும்’ என உறுதியளித்தார்.
அவிநாசி- அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி அவிநாசியில் நேற்று நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்றோர். (அடுத்த படம்) வாயில் கருப்புத் துணி கட்டி உண்ணாவிரதத்தை தொடர்ந்தவர்கள்.