

விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்தார்.
பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபை சார்பில் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா ஐம்பெரும் விழாவாகக் கொண்டாடப்பட்டது. இதற்கு அனைத்து வெள்ளாளர் மகா சபைத் தலைவர் குரு சுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முத்துராமலிங்கம் முன் னிலை வகித்தார்.
சிதம்பரனாரின் சிறப்புகள் குறித்து அனைத்து வெள்ளா ளர் மகாசபையின் நிறுவனரும், அண்ணாமலை பல்கலைக்கழகத் தின் தனி அலுவலருமான கார்த்தி கேயன் பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரி சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதிப்பது சரியல்ல. விநாயகர் சதுர்த்தி விழாவை அரசு ஏற்று நடத்த வேண்டும். வெள்ளாளர் சமுதாயத்துக்கு அடையாளமாக கிராம கர்ணம் பதவி இருந்தது. தற்போது அது பறிபோய்விட்டது.
அதை சமுதாயத்தினர் அனைவரும் சேர்ந்து போராடி மீண்டும் பெற வேண்டும். இளைய தலைமுறையினரைப் பாதுகாக்க வேண்டும் என்றால் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். மத்திய அரசு நாட்டைப் பாதுகாத்து வருகிறது. மோடியின் செயலால் எல்லைப் பகுதி பாதுகாக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது. நித்யானந்தா வால் எங்கள் குரு மகா சன்னி தானத்தை ஒன்றும் செய்ய முடி யாது. அவருக்கும், எங்கள் குரு மகா சமுதாயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பு சரியானது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.