பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜுக்கு வாசன் வாழ்த்து

பாரா ஒலிம்பிக்: வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜுக்கு வாசன் வாழ்த்து
Updated on
1 min read

பாரா ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சுஹாஸ் யாதிராஜுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜி.கே.வாசன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ டோக்கியோ பாரா ஒலிம்பிக் ஆடவர் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் சுஹாஸ் யாதிராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பாராலிம்பிக் பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் இந்தியாவைச் சேர்ந்த சுஹாஸ் யாதிராஜ் ஐஏஎஸ் அதிகாரி என்பது பெரிதும் பாராட்டுக்குரியது.

ஆடவருக்கான SL4 பிரிவு பாட்மிண்டன் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில், திறமையாக விளையாடிய சுஹாஸ் யாதிராஜ் 21-9, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாரா பாட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை வென்றிருப்பது சிறப்புக்குரியது.

இதனால் இந்திய விளையாட்டு வீரர்கள் உற்சாகம் அடைகிறார்கள். இதன் மூலம் இந்திய விளையாட்டு வீரர்களின் பெருமை உலக அரங்கில் மேன்மேலும் பரவுகிறது. குறிப்பாக இந்த வெற்றியானது இந்திய பாட்மிண்டன் விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமளிக்கிறது.

பாரா ஒலிம்பிக்கில் இந்தியா மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் வென்றிருப்பதன் மூலம் இந்தியாவின் புகழ் உலக அளவில் மேலும் பரவுகிறது. வீரரின் விளையாட்டுக்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், பயிற்சியாளருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள்.

தனது கடுமையான பயிற்சியின் மூலம் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் சுஹாஸ் யாதிராஜை தமாகா சார்பில் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் சுஹாஸ் யாதிராஜைத் தொடர்ந்து இந்திய வீரர், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்கள் பெற வேண்டும்.

உலக அளவில் இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் சுஹாஸ் யாதிராஜ் தொடர்ந்து விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று சாதனை புரிய தமாகா சார்பில் வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in