Published : 05 Sep 2021 03:15 AM
Last Updated : 05 Sep 2021 03:15 AM

சென்னையில் கடந்த 10 நாட்களில் கடலில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு

சென்னை

சென்னையில் கடந்த 10 நாட்களில் மட்டும் கடலில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கரோனா ஊரடங்கைத் தொடர்ந்து,கடந்த சில மாதங்களாக கடற்கரைகளுக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 23-ம் தேதி முதல் கடற்கரைகளுக்கு செல்ல பொதுமக்களுக்கு அரசு அனுமதி அளித்தது.

அனுமதி அளிக்கப்பட்ட அன்றைய தினமே சென்னை மெரினா கடலில் மூழ்கி 3 மாணவர்கள் உயிரிழந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த 7 பள்ளி மாணவர்கள், மெரினா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அலையில் சிக்கிய 4 மாணவர்கள் உயிருக்குப் போராடியுள்ளனர். இதைப் பார்த்த மீனவர் ஒருவர், மூன்று மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளார். அக்பர் அலி என்பவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.

இதேபோல், ஆகஸ்ட் 28-ம் தேதி திருவான்மியூர் கடற்கரையில் மேத்யூ என்பவரும், வியாழக்கிழமை பெசன்ட் நகர் கடற்கரையில் சுஷாந்த் என்பவரும் கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர்.

ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்த 10 நாட்களில், சென்னை கடலில் மூழ்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கடற்கரைகளில் பாதுகாப்பு பணிகளை போலீஸார் அதிகப்படுத்தியுள்ளனர். கடலுக்குள் இறங்குபவர்களை எச்சரித்து வெளியே வரச் சொல்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x