

கடலூர் மாவட்டம் விருத்தாச லத்தை அடுத்த சித்தேரிக்குப்பம் அருகேயுள்ளது கவணை கிராமம். இக்கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கடந்த 1963-ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 2019-ம் ஆண்டு வரை 19 மாணவர்கள் வரை பயின்று வந்தனர். தற் போது மாணவர் சேர்க்கையை அதிகரித்து 40 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரண்டு ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளிக் கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் இருந்ததால் கடந்த 2019-ம் ஆண்டு பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டது.
கரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டதால், புதிய பள்ளிக் கட்டிடம் குறித்து அதிகாரிகள் யாரும் கவனம் செலுத்தவில்லை. இந்நிலையில் பள்ளித் தலைமை யாசிரியை பெருந்தேவி, மாவட் டக் கல்வி அலுவலகம் மூலமாக விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பள்ளிக்கு புதியகட்டிடம் கட்டித் தருமாறு மனுஅளித்தார். அந்த மனு, ஆட்சி யரின் பார்வைக்கு கொண்டு செல் லப்பட்டது.
‘என்எல்சி சமூக பொறுப்பு ணர்வுத் திட்டத்தின் கீழ் ரூ.15.47 லட்சம் செலவில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டித் தரப்படும்’ என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை புதிய பள்ளிக்கான கட்டிடம் தொடங்கப்படவில்லை. தற்போது பள்ளியில் 40 மாண வர்கள் சேர்த்துள்ளனர். பள்ளிக்கு கட்டிடம் இல்லாததால், எங்கு அமர்ந்து பள்ளி நிர்வாகப் பணி களை மேற்கொள்வது, சேர்க்கை நடத்துவது, மாணவர்களுக்கு எப்படி வினாத்தாள் வழங்கு வது என ஆசிரியர்கள் குழம்பியி ருந்தனர்.
இந்நிலையில், கவணை கிராம மக்கள் ஒரு வீட்டைத் தேர்வு செய்து,அங்கு மாணவர்களை வரவ ழைத்து, நிர்வாகப் பணிகளை கவனிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி அங்குள்ள ஒரு வீட்டை பள்ளி அலுவலகமாக மாற்றிஉள்ளனர்.
ஆசிரியர்கள் அங்கிருந்த படியே அவ்வப்போது வரும் மாணவர்களுக்கு சந்தே கத்தை நிவர்த்தி செய்து வீட்டுக்கு அனுப்பி வைக்கின்றனர்
இதுதொடர்பாக சில மாண வர்களிடம் பேசியபோது, "எங்கள் பள்ளிக் கட்டிடம் இடிக்கப்பட்டு விட்டது. தற்போது வீட்டிலிருந்து படித்து வருகிறோம், சந்தேகம் கேட்க மட்டும் இங்கு வந்து, கேட்டுவிட்டு செல்வோம்" என் றனர்.
கவணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு விரைவில் கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்று இக்கிராம மக்கள் கோரிக்கைவைத்துள்ளனர்.