Published : 05 Sep 2021 03:16 AM
Last Updated : 05 Sep 2021 03:16 AM

மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்: தமிழக அரசுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

விழுப்புரத்தில் செய்தியாளர்களுக்கு நேர்காணல் அளித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன்.

விழுப்புரம்

பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், கல்விக் கடன் ரத்து உள்ளிட்ட மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களையாவது உடனடியாக நிறைவேற்ற வேண் டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று மாலை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப் புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆலோசனை நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த அக்கட்சியின் தலைவர் ஜி கே வாசன் முன்னதாக செய்தியாளர்களிடம் கூறியது:

திமுக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் கரோனா தாக்கத்தை குறைக்க 90 நாட்கள் போராடியது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.அதேநேரத்தில் தேர்தல் நேரத் தில் கொடுத்த ஏராளமான வாக்குறு திகளையும், பேரவையில் அறிவித்ததிட்டங்களையும் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயித்து அதற்குள் நிறைவேற்ற வேண்டும்.

நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டதால் நிதி இல்லை என சாக்குபோக்கு சொல்லக்கூடாது. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம், கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்களையாவது உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வால் ஏழைகள், நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவார்கள். அதேநேரத்தில் கரோனா கால கட்டம் என்பதால் சர்வதேச சந்தை யில் ஏற்படும் மாற்றங்களை பொருத்து மத்திய அரசு இந்த விஷயத்தில் முடிவு எடுக்கிறது. இருப்பினும், கூடிய விரைவில் பெட்ரோல், சமையல் எரிவாயு விலை உயர்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிபடி டீசல் விலையை குறைக்கவும், எரி வாயு சிலிண்டருக்கு ரூ.100 மானியம்வழங்கும் திட்டத்தையும் நடை முறைப்படுத்த வேண்டும்.

கரோனா 3 வது அலை தாக் கத்தை பொறுத்து உள்ளாட்சித் தேர்தலை எப்போது நடத்துவது என்பதை மாநில அரசு முடிவு செய்ய வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் முக்கியம் என்றாலும், மக்களின் பாதுகாப்பையும் கவனத் தில் கொண்டு அரசு முடிவு எடுக்க வேண்டும்.

வேளாண் சட்டத்தால் நன்மை

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை மாநிலங்களவையில் ஆதரித்து பேசியுள் ளேன். இச்சட்டத்தால் விவசாயிகளுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். ஒரு சில மாநிலங்களைச் சேர்ந்த சில ஆயிரம் விவசாயிகள் மட்டுமே இச்சட்டத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். இச்சட்டத்தில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் அதை நிவர்த்தி செய்யவும், சட்டம் குறித்து தெளிவு பெறவும் விவசாய சங்கங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை அவசரமாக செய்யப்பட வேண்டிய அவசிய திட்டம் ஆகும். இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில் தொடக்கத் தில் இருந்தே அரசியல் காழ்ப்பு ணர்ச்சியுடன் விசாரணை நடத்தப் படுவதாக மக்கள் உணர்கின்றனர். தேசிய அளவில் பாஜக கூட்டணி யிலும், மாநிலத்தில் அதிமுக கூட்டணியிலும் தமாகா தொடர்ந்து பயணித்து வருகிறது.

அயோத்திதாசருக்கு மணிமண் டபம் அமைக்கும் தமிழக அரசை முடிவை தமாகா வரவேற்கிறது. மேலும், வ.உ.சி.யின் 150 வது பிறந்த தினத்தையொட்டி அவரது பெயரில் விருது அறிவித்துள்ளது அவரது புகழுக்கு பெருமை சேர்க் கும். நான் மத்திய அமைச்சராக இருந்தபோது தூத்துக்குடி துறைமுகத்துக்கு வ.உ.சி பெயரை சூட்டினேன் என்று தெரிவித்தார்.

நேர்காணலின்போது, முன்னாள் எம்.பி.யும், மாநிலத் துணைத் தலைவருமான பி.ஆர்.எஸ்.வெங்கடேசன், தமாகா மாவட்டத் தலைவர் தசரதன், கணேஷ், ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x