மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி: அமைச்சர் மதிவேந்தன் அறிவிப்பு

அமைச்சர் மதிவேந்தன்: கோப்புப்படம்
அமைச்சர் மதிவேந்தன்: கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை மெரினா கடற்கரையில் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும் என, அமைச்சர் மா.மதிவேந்தன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (செப். 04) சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, அத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் 30 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அந்த அறிவிப்பில் ஒன்றாக, "சென்னை மெரினா கடற்கரையில் ராயல் மெட்ராஸ் கிளப் உடன் இணைந்து பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்.

உலகின் இரண்டாவது நீளமான மெரினா கடற்கரையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் ராயல் மெட்ராஸ் யாட் கிளப் இணைந்து (royal madras yacht club) மோட்டார் படகுகள், அதிவிரைவு படகுகள் மற்றும் பொழுதுபோக்கு படகு சவாரி தொடங்கப்படும்" எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in