

கோயில்களில் இனி முடி காணிக்கைக்கான கட்டணம் பக்தர்களிடமிருந்து வசூலிக்கப்படாது என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இன்று (செப். 04) இந்து சமய அறநிலையத்துறை (சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது, அத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். "திருக்கோயில்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதல் பொருட்டு செய்யும் முடி காணிக்கைக்கான கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. அதற்கான கட்டணத்தை அப்பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்குத் திருக்கோயில் நிர்வாகமே செலுத்தும்" என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.