தமிழக அரசியலில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது: தொல். திருமாவளவன் கருத்து

தமிழக அரசியலில் தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது: தொல். திருமாவளவன் கருத்து
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காளையார்கோவிலில் நேற்று முன்தினம் இரவு மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் இந்திய கம்யூனிஸ்ட் மாநி லச் செயலர் இரா.முத்தரசன் பேசியதாவது:

மக்கள் நலக்கூட்டணியைப் பொருத்தவரை வரப்போகிற தேர்தல் என்பது அரசியல் போரா ட்டமாகும். அதிமுக, திமுக ஊழல் கட்சிகள். ஊழலுக்கு முடிவுகட்ட வேண்டிய கட்டாயம் வரும் தேர்தலில் ஏற்பட்டுள்ளது. எங்கள் கரங்கள் கறைபடியாத கரங்கள் என்றார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது:

அதிமுகவும், திமுகவும் குடிப் பழக்கத்தை பொதுக் கலாச் சாரமாக மாற்றி சமூகத்தை சீரழித்திருக்கிறார்கள். இந்த தருணத்தில் நல்ல முடிவை நாம் எடுக்கவில்லை என்றால் பெரிய வரலாற்றுப்பிழையை செய்தவர்கள் ஆகிவிடுவோம். லாப நஷ்டக்கணக்கில் அரசி யல் செய்யவில்லை. சமூக பொறுப் புணர்வோடு 4 கட்சி தலைவர்களும் ஒன்றாகியுள்ளோம்.

தமிழக அரசியலில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டிருக்கிறது. நம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டிருப்பதால் நாம் வேகமாக செல்கிறோம். மற்றவர்கள் பின்தங்கியிருக்கிறார்கள். அதிமுக, திமுக மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியை மாற்ற நாம் நம்பிக்கையோடு தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பேசி யது: அதிமுகவும், திமுகவும் கார்ப்பரேட் கம்பெனிகள். ஊ ழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தற்போது முக்கி யமான பிரச்சினையாக உள்ளது. குடிப்பழக்கத்தால் தமிழ்ச் சமுதாயம் அழிந்துவருகிறது. அதனை காப்பதற்கு மதுவிலக்கு வேண்டும் என்று மக்கள் நலக் கூட்டணி கொள்கையாக அறிவித்துள்ளது. அதிமுக, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் மக்களிடத்தில் உருவா கியிருக்கிறது என்றார்.

மதிமுக பொதுச் செயலர் வைகோ பேசியதாவது: நம்பிக்கைேயாடு தேர்தலைச் சந்திக்க வேண்டும். மூட நம்பிக்கைகளின் கூடாரமாக அதிமுக திகழ்கிறது. நாம் இணைந்து பணியாற்றினால் நாம்தான் ஆட்சி க்கு வரப்போகிறோம். ஊழல் இல்லாத ஆட்சி அமைத்து காட்டு வோம். விவசாயக் கடன்களை வட்டியோடு அசலையும் தள்ளு படி செய்வோம். அதிமுக, திமு கவினர் ஊழலில் சம்பாதித்த சொத்துகளை பறிமுதல் செய்து பொதுச் சொத்தாக்குவோம் என் றார். மதிமுக மாவட்டச் செயலர் புலவர் செவந்தியப்பன், இந்திய கம்யூ. செயலர் எஸ்.குணசேகரன் எம்எல்ஏ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.கந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலர் திருமொழி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in