Published : 15 Feb 2016 10:17 AM
Last Updated : 15 Feb 2016 10:17 AM

மதுரையில் ‘தி இந்து - பெண் இன்று’ மகளிர் திருவிழா: கலைநிகழ்ச்சிகளில் பெண்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டனர்

‘தி இந்து - பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா மதுரை பாத்திமா கல்லூரியில் நேற்று வெகுவிமரி சையாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தின் முக்கிய நகரங் களில் கடந்த 2 ஆண்டுகளாக ‘தி இந்து’ வாசகர் திருவிழா நடத் தப்பட்ட நிலையில், ‘தி இந்து’ நாளிதழுடன் ஞாயிறுதோறும் வெளி யாகும் ‘பெண் இன்று’ இணைப் பிதழ் சார்பில் பெண் வாசகர் களுக் கு மட்டுமான மகளிர் திருவிழா திருச்சியில் ஜன. 10-ம் தேதியும், கோவையில் ஜன. 24-ம் தேதியும் நடைபெற்றது. தொடர்ந்து மதுரையில் நேற்று 3-வது நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

மதுரை மகளிர் திருவிழாவில் ஏராளமான வாசகியர் தங்களது குடும்ப நிகழ்ச்சியைப் போல் பங்கேற்று காலை முதல் மாலை வரை உற்சாகத்தில் திளைத்தனர். ‘தி இந்து’ நாளிதழ் இணைப்பிதழ்களின் ஆசிரியர் டி.ஐ.அரவிந்தன் வரவேற்றார்.

‘சைபர் குற்றங்கள்’ மற்றும் ‘தற்காப்பே பெண் காப்பு’ என்ற தலைப்புகளில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் எஸ்.முரு கன், ‘பெண் சுதந்திரம்’, ‘பெண்கள் முன்னேற்றம்’, ‘சமுதாய பங்களிப்பு’ ஆகிய தலைப்புகளில் மதுரை அப் போலோ சிறப்பு மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரோகிணி தர், பாத்திமா கல்லூரி முதல்வர் முனைவர் கா.பாத்திமாமேரி, மதுரை மாநக ராட்சி துணை ஆணையர் செ.சாந்தி ஆகியோரும், ‘பெண்களின் மன நலம்’ என்ற தலைப்பில் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் கீதாஞ்சலி, தொழில்முனைவோர் வழிகாட்டி என்ற தலைப்பில் சுபா பிரபாகர், ‘விவசாயம் கற்போம்’ என்ற தலைப்பில் பெண் விவ சாயி பிரசன்னா ஆகியோரும் சிறப்புரையாற்றினர்.

பின்னர், ‘வீட்டில் நடப்பது மீனாட்சி ஆட்சியா? சொக்கர் ஆட் சியா? என்ற தலைப்பில் பேச்சரங்கு நடைபெற்றது. ரேணுகாதேவி நடுவராக இருந்தார். இதில் மகேஸ் வரி, ஆஷிலா ஆகியோர் பேசினர். முன்னதாக சிவகங்கை மாவட் டம், தேவகோட்டை சேர்மன் மாணிக் கவாசகம் நடுநிலைப் பள்ளி மாண விகளின் அபிராமி அந்தாதி, திருக் குறள் நடனம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

மதிய உணவுக்குப் பிறகு திண் டுக்கல் சக்தி கலைக் குழுவைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற பறை யாட்டம் நடைபெற்றது. பெண்களுக் கான பாட்டு, கோலப் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், சிறப் பான பங்கேற்பாளர்களுக்கும், கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவை ‘தி இந்து’வுடன் ஹார் லிக்ஸ் ஓட்ஸ், லலிதா ஜூவல்லரி, எல்ஜி அல்ட்ரா கிரைண்டர், மீகா புட்ஸ், பிரே லேடி குக்கிங் ஹேப் பினஸ், ஸ்டைல் வாக் காலணிகள், பிருத்வி உள்ளாடைகள், விஎல்சிசி ஹெல்த் ஹேர் லிட்., மைடிரீம்ஸ் உள்ளாடைகள், தங்கமயில் ஜுவல் லரி, எஸ்விஎஸ் கடலைமாவு, அகல்யா பொட்டிக், சாஸ்தா நல்லெண்ணெய், லியோ காபி, ஸ்ரீசபரீஸ் உணவகம், வெஸ்டர்ன் பார்க் ஹோட்டல் ஆகிய நிறுவனங் கள் இணைந்து வழங்கின. விழா அரங்கை இலவசமாக வழங்கி பாத்திமா கல்லூரி விழாவை இணைந்து நடத்தியது.

நிகழ்ச்சியை மதுரை நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி ஆசி ரியை கவுரி மற்றும் ஜெயவல்லி ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x