அதிமுக கிளைச் செயலர் மகன் மர்மச்சாவு: போலீஸார் தாக்கியதில் இறந்ததாக கிராம மக்கள் புகார்

அதிமுக கிளைச் செயலர் மகன் மர்மச்சாவு: போலீஸார் தாக்கியதில் இறந்ததாக கிராம மக்கள் புகார்
Updated on
1 min read

விருதுநகர் மாவட்டம், வத்திரா யிருப்பு அருகே அதிமுக கிளைச் செயலர் மகன் மர்மமான முறை யில் வியாழக்கிழமை கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

வத்திராயிருப்பு அருகே கூமாப் பட்டி பகுதியில் இருதரப்பினரி டையே பல ஆண்டுகளாக பிரச்சி னைகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமை மாலை கூமாப்பட்டி ராமசாமியா புரத்தைச் சேர்ந்த தங்கப்பாண்டி, சந்திரபோஸ் ஆகியோர், மற் றொரு தரப்பினர் உள்ள பகுதிக் குச் சென்று அங்கிருந்த ஆட்டோ வில் அமர்ந்து மது அருந்தியுள் ளனர். அவர்களை ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ் (26) கண்டித்துள் ளார். அப்போது ஆத்திரமடைந்த தங்கபாண்டியும், சந்திரபோஸும் மதுபாட்டிலால் நாகராஜை தாக்க முயன்றனர்.

காவல் நிலையத்தில் புகார்

அப்போது, ராமசாமியாபுரம் அதிமுக கிளைச் செயலரும், ஊராட்சி மன்றத் துணைத் தலை வருமான ராமச்சந்திரன் என்ப வர் தங்கப்பாண்டி, சந்திரபோஸ் ஆகியோரிடம் அடுத்த தெருவில் போய் ஏன் பிரச்சினை செய் கிறீர்கள் எனக்கூறி கண்டித்துள் ளார். அப்போது, ராமச்சந்திர னையும் அவர்கள் தாக்கினர். இதுகுறித்து, கூமாப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்க ராமச்சந்திரன் சென்றுள்ளார். அவரைத் தடுப்பதற்காக தங்க பாண்டியும், சந்திரபோஸும் ராம சந்திரன் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்கபாண்டி யும், சந்திரபோஸும் ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்துள்ளதை அறிந்த சிறப்பு எஸ்.ஐ. பஞ்சபாண்டி, காவ லர்கள் ரவி, மோகன்குமார் ஆகியோர் ராமச்சந்திரன் வீட்டுக்கு வந்து பார்த்தபோது அங்கு அவ ரது மகன் பாலமுருகன் இறந்து கிடந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

சாலை மறியல்

ஆனால், பாலமுருகனை போலீ ஸார் அடித்துக் கொன்றுவிட்ட தாகக் கூறி, அங்குள்ள அம்பேத் கர் சிலை முன் அவரது சடலத்து டன் கிராம மக்கள் சாலை மறிய லில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்த வழியாக கூமாப்பட்டி காவல் நிலைய எஸ்.ஐ. ராஜா மோட்டார் சைக்கிளில் சென் றுள்ளார். பாலமுருகனை அடித் துக் கொன்ற போலீஸாரை விடக் கூடாது என்று கூறி ஒரு கும்பல் அவரைத் துரத்தியுள்ளது.

இந்நிலையில் பாலமுருகனின் வயிறு அசைந்துள்ளது. இதனை யடுத்து வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, அவர் இறந்துவிட்டதாகக் கூறினர்.

பாலமுருகனை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாகவும், மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மருத்துவமனை முன் பாலமுருகன் தரப்பினர் திரண் டுள்ளனர்.

போலீஸார் குவிப்பு

சம்பவ இடத்தில் மதுரை சரக டி.ஐ.ஜி. ஆனந்தகுமார் சோமானி, மாவட்ட காவல் கண்காணிப் பாளர் மகேஸ்வரன் ஆகியோர் முகாமிட்டுள்ளனர். இப்பகுதி யில் பஸ் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் மோதிக்கொள்ளும் சூழ்நிலையுள்ள பகுதிகளில் போலீஸார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in