

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட படகுகளை விடுவிக்கக் கோரி வரும் 29-ம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர கத்தை முற்றுகையிட உள்ளதாக மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.
நாகை, காரைக்கால், தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 8 மாவட்ட மீன வர் சங்கப் பிரதிநிதிகளின் கூட்டம் நாகையில் நேற்று நடைபெற்றது.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள 27 மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 81 விசைப்படகுகளை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்தும், உட னடியாக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரியும் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகத்தை வரும் 29-ம் தேதி முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவது என்று இந்தக் கூட்டத் தில் முடிவு செய்யப்பட்டது.