

கும்பகோணத்தில் நடக்கும் மகாமக திருவிழாவுக்கான பாதுகாப்பு உள் ளிட்ட ஏற்பாடுகள் தொடர்பாக தலை மைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஜெய லலிதா நேற்று ஆலோசனை நடத்தினார்.
தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் மகாமக திருவிழா இன்று தொடங்கி, 22-ம் தேதி வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த தென்ன கத்தின் கும்பமேளாவில், நாடு முழு வதும் இருந்து லட்சக்கணக் கானவர்கள் பங்கேற்று, மகாமக குளத்தில் புனித நீராடுவர். இதை முன்னிட்டு, தமிழக அரசு விரிவான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்நிலையில், மகாமக விழா ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதி காரிகளுடன் முதல்வர் ஜெய லலிதா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வ நாதன், எடப்பாடி கே.பழனிச்சாமி, பழனியப்பன், எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் கு.ஞான தேசிகன், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், வீட்டுவசதித் துறை செயலாளர் கே.பனீந்திர ரெட்டி, உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா, டிஜிபி அசோக் குமார் மற்றும் அறநிலையத்துறை செயலாளர் மா.வீரசண்முகமணி ஆகியோர் பங்கேற்றனர்.
மகாமகத்தையொட்டி கும்ப கோணத்தில் அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து முதல்வரிடம் வீரசண்முகமணி விளக்கினார். பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக அதிகாரிகளிடம் முதல்வர் கேட் டறிந்தார். மேலும், எந்தவித பிரச்சினைகளும் இன்றி, விழாவை நடத்தி முடிக்கத் தேவையான ஆலோசனைகளையும் அதிகாரி களுக்கு முதல்வர் வழங்கினார்.