கோடநாடு வழக்கு: எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் விசாரணை

விசாரணைக்கு வந்த நடராஜன்.
விசாரணைக்கு வந்த நடராஜன்.
Updated on
1 min read

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் உதகை பழைய எஸ்.பி. அலுவலகத்தில் போலீஸார் இரண்டு மணிநேரத்துக்கு மேல் விசாரணை நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட் கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக, போலீஸார் சயான் மற்றும் உயிரிழந்த கனகராஜ் சகோதரர் தனபாலிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (செப். 02) விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அரசு வழக்கறிஞர்கள் விசாரணைக்கு கால அவகாசம் கோரியதால், வழக்கு விசாரணை அக்டோபர் 1-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், உதகையில் பழைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் முன்னிலையில் இன்று (செப். 03) கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜரானார். அவரிடம் ரகசியமாக இரண்டரை மணிநேரம் மேலாக விசாரணை நடைபெற்றது.

விசாரணை முடிந்து வெளியில் வந்த நடராஜன் ஒன்றும் கூறாமல் சென்றார். அவரது வழக்கறிஞர் ராஜ்குமார், 'உங்களை பின்னர் சந்திக்கிறேன்' என கூறிச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in