

கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 1987-ம் ஆண்டு நடைபெற்ற ஒரு வார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த 21 பேருக்கு ரூ.4 கோடியில் மணிமண்டபம் அமைக்கப்படும். அவர்களின் குடும்பத்தினருக்கு கல்வித் தகுதிக்கேற்ப அரசு வேலை வாய்ப்பு வழங்கப் படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சட்டசபையில் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்று விழுப்புரம் நகர திமுக சார்பில் மாவட்ட அவைத்தலைவர் ஜெயசந்திரன் தலைமையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி, பாட்டாசு வெடித்து கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, இளைஞரணி அமைப்பாளர் தினகரன், ஒன்றிய செயலாளர்கள் மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, நிர்வாகிகள் மணிகண்டன், விநோத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.