தமிழகத்தில் நல்லாட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

தமிழகத்தில் நல்லாட்சி அமைய மக்கள் உறுதுணையாக இருக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்
Updated on
1 min read

தமிழகத்தில் பள்ளிக்கல்வி மோச மாகவுள்ளது என்று குற்றஞ் சாட்டியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமிழகத்தில் இனியாவது நல்லாட்சி அமைய மக்கள் துணை நிற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு மம், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள 7 ஆயிரத்து 216 பள்ளிகளில் 2 லட் சத்து 76 ஆயிரத்து 416 மாணவ, மாணவியர்களிடம் ஆய்வு நடத்தி சமீபத்தில் அறிக்கை வெளியிட் டது. இந்த ஆய்வு, தமிழ்நாட்டில் 280 பள்ளிகளில் நடந்தது.

இந்த ஆய்வு முடிவுகளில், தமிழகத்தில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 ஆகிய வகுப்பு பாடத் திட்டங்கள் அகில இந்திய அள வில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட வில்லை. சிபிஎஸ்சி மற்றும் ஐசிஎஸ்இ-க்கு இணையான தரத் தில் இல்லை என்று கூறப்பட்டுள் ளது. மேலும், தமிழகத்தின் 10-ம் வகுப்பு மாணவ, மாணவியர் களின் தேர்ச்சி சதவீதம் ஆங்கிலம், கணக்கு, அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங் களில் மிகக் குறைவாக உள்ள தென்றும், தேர்ச்சி விகிதத்தில் இந் திய சராசரியை விட தமிழ்நாட்டின் சராசரி மிக மிக குறைவாக உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

9 மற்றும் 10-ம் வகுப்பு மாண வர்களுக்கு தமிழில் பிழை இல் லாமல் வார்த்தைகளை எழுதத் தெரியவில்லை. ஆங்கில எழுத்து களை எழுதத் தெரியவில்லை என்றும் கூறப்படுவது அதிர்ச்சி யளிக்கிறது. 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் அதிகளவிலான மாணவ, மாணவியர் தேர்ச்சியடைந்தனர் என வெறும் கணக்கை காட்டும் நோக்கில்தான் அரசு செயல்படுகிறது என்ற கல்வியாளர்களின் குற்றச்சாட்டை உண்மையாக்கும் விதமாகவே, மத்திய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமத்தின் ஆய்வு அறிக்கை அமைந்துள்ளது.

கல்வியின் தரம், ஏழை மாணவ, மாணவியரின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படாமல் இந்த அரசு செயல்படுகிறது. தமிழக அர சின் கல்வித்துறை செயலாளர் உயர்நீதிமன்றத்தால் கண்டிக்கப் பட்டு, 2 முறை ரூபாய் பத்தாயிரம் அபராதம் விதிக்கப்பட்டும் இந்த அரசு திருந்தியபாடில்லை. எனவே, இனியாவது தமிழக மக்கள் விழித்துக்கொண்டு நல் லாட்சி அமைய உறுதுணையாக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் தற்போதுள்ள பாடத் திட்ட முறைகள் தொடர்ந்தால், தமிழக மாணவ, மாணவியரின் முழுத்திறமையும் வெளிப்படாது. எனவே, உலக தரத்துக்கும், தேசிய கல்வி திட்டத்துக்கும் இணையான பாடத் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை உருவாக்க வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in