

பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்த தமிழக அரசு விதித்துள்ள தடை விலக வேண்டி திருநெல்வேலியில் நெல்லையப்பர் காந்திமதியம்மன் திருக்கோயில்முன் இறைவனிடம் முறையிடும் போராட்டத்தை இந்து முன்னணி நடத்தியது. இந்து முன்னணி மாநிலச் செயலாளர் குற்றாலநாதன் தலைமை வகித்தார்.
இதில், இந்து முன்னணியினர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியி னர் உள்ளிட்ட 50-க்கும் மேற் பட்டோர், விநாயகர் நாமம் சொல்லி பிரார்த்தனை செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, அவர்கள் நெல்லை யப்பர் கோயிலை வலம் வந்து கோரிக்கை மனுவை வைத்து சுவாமி நெல்லையப்பரிடம் முறை யிட்டனர்.
இதுதொடர்பாக, குற்றால நாதன் கூறும்போது, ``தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டாலும் தடையை மீறி விநாயகர் சதுர்த்தி விழா நடத்தப்படும்.
நாளைய தினம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி யுடன் விநாயகர் சதுர்த்தி விழா தொடங்கும்” என தெரிவித்தார்.