

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் வழங்கும் மசோதா, இன்று தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால், சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றங்களிடம் கோரலாம். இதனால், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இருந்தது.
இந்நிலையில், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவுத் தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் வகையில் அதிகாரம் வழங்கும் பத்திரப்பதிவு திருத்தச் சட்ட மசோதாவை இன்று (செப். 02) தமிழக சட்டப்பேரவையில் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அறிமுகம் செய்தார். அதன்படி, இனி போலி பத்திரப்பதிவைப் பதிவுத்துறைத் தலைவரே ரத்து செய்து நடவடிக்கை எடுக்கலாம்.
இந்த மசோதா உடனடியாக ஆய்வுக்கு எடுக்கப்பட்டு, சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.