Published : 02 Sep 2021 03:13 AM
Last Updated : 02 Sep 2021 03:13 AM

அநியாயத்தை தடுக்க எப்போதும் தயங்காதீர்கள்: காவல் உதவி ஆய்வாளர்களுக்கான பயிற்சி தொடக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

அநியாயத்தை தடுக்க எப்போதும் தயங்காதீ்ர்கள் என்று காவல் உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சி தொடக்க விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வண்டலூர் ஊனமாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில், உதவி ஆய்வாளர்களுக்கான ஓராண்டு பயிற்சியை காணொலி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறி்ப்பு:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் காவல்உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 26-ம் தேதி பணி நியமன ஆணைகளை வழங்கினார். பணி நியமனம் பெற்ற 941 பேரில், தாலுகா காவல் நிலையங்களுக்கு 645 பேரும், ஆயுதப்படைக்கு 265 பேரும், தமிழ்நாடு சிறப்பு காவல்படைக்கு 31 பேரும் ஆணைகளை பெற்றுள்ளனர். இவர்களில் 280 பெண் காவல் ஆய்வாளர்களும் உள்ளனர். இவர்களுக்கு, தமி்ழ்நாடு உயர் பயிற்சியகத்தில் ஓராண்டு அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வரும் 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நிறைவு பெறும்.

இப்பயிற்சியை தொடங்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

அரசின் ஒரு கை நிர்வாகம் என்றால் மற்றொரு கை காவல்துறை. இரண்டும் முறையாக, சரியாகச் செயல்பட்டால் அந்த அரசாங்கம் தலைசிறந்த அரசாங்கமாக போற்றப்படும். அந்தவகையில் காவல்துறையின் செயல்பாடு மிகவும் முக்கியமானது. இத்துறையில் எத்தனையோ உயர் பதவிகள்இருந்தாலும், மக்களோடு நேரடியாக தொடர்பு கொள்ளக் கூடியவர்களாக உதவி ஆய்வாளர்களாகிய நீங்கள்தான் இருக்கப் போகிறீர்கள். அந்தவகையில் முக்கியமான கடமையும் பொறுப்பும் உங்களுக்கு உள்ளது. ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின் துறைவாரியாக உயர் அதிகாரிகளுடன் தனித்தனியாக கலந்துரையாடினேன்.

அப்போது உயர் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து, ஓர் கருத்தை வலியுறுத்திச் சொன்னேன். ‘‘காவல்துறை என்றாலே குற்றங்களைத் தடுக்கும் துறையாக, தண்டனை வாங்கித் தரும்துறையாக மட்டுமே அனைவரும் நினைக்கின்றனர். காவல்துறை என்பது குற்றங்கள் நடக்காதவகையில் சூழலை உருவாக்கித் தரும் துறையாக மாற வேண்டும் என்பது என்னுடைய ஆசை. குற்றங்கள் குறைய வேண்டும் என்பதைவிட, குற்றமே நடைபெறாத சூழலைஉருவாக்கும் துறையாக மாற வேண்டும்’’ என்று குறிப்பிட்டேன். என்னுடைய இந்த ஆசை உங்கள்ஆசையாகவும் மாற வேண்டும். அரசிடம், மக்கள் எதிர்பார்ப்பது அமைதிதான். அந்த அமைதியை உருவாக்கித் தரும் கடமை காவல்துறைக்கு இருக்கிறது. உடல்வளம், மனத்திறம், அறிவு வளம் மூன்றும்உள்ளவர்களாக நீங்கள் மாற வேண்டும். தொழில்நுட்ப அறிவுகாவல்துறையினருக்கு அவசியம்வேண்டும். பயிற்சி பெற்று காவல்துறையில் நீங்கள் செயல்பட தொடங்கும்போது அமைதியான தமிழகத்தை உருவாக்க சூளு ரைக்க வேண்டும்.

அநியாயத்தை தடுக்க எப்போதும் தயங்காதீ்ர்கள். நியாயத்துக்காக எப்போதும் நில்லுங்கள். உங்கள் எல்லைக்கு உட்பட்ட பகுதியை குற்றம் நடக்காத பகுதியாக மாற்றுங்கள். உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின் முன்நிறுத்துங்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டுங்கள். இவற்றை சட்டப்பூர்வமாக செய்யுங்கள்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் டிஜிபி செ.சைலேந்திரபாபு, காவல் உயர் பயிற்சியகத்தின் இயக்குநர் அ.அமல்ராஜ் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x