Published : 02 Feb 2016 09:12 AM
Last Updated : 02 Feb 2016 09:12 AM

3 மாணவிகள் உயிரிழந்த வழக்கு: சிபிசிஐடி சோதனையில் ஆவணங்கள் சிக்கின - தாளாளரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

எஸ்விஎஸ் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக விசாரித்து வரும் சிபிசிஐடி போலீஸார், நேற்று கல்லூரியை சோதனையிட்டு பல்வேறு ஆவணங்களை கைப் பற்றினர். தாளாளர் வாசுகியை காவலில் எடுத்து விசாரிக்க போலீ ஸாருக்கு விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக் குறிச்சி அருகே பங்காரம் கிராமத் தில் உள்ள எஸ்விஎஸ் சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகளான சரண்யா, பிரியங்கா, மோனிஷா ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டது. சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி மற்றும் போலீஸார் கடந்த இரு தினங்களாக கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு சிபிசிஐடி போலீ ஸார் நேற்று சென்று கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ள சீலை அகற்றக் கோரி விண்ணப்பித்தனர். மனுவை ஏற்ற நீதிபதி தமிழ்செல்வி உத்தர விட்டதன்பேரில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் மாலதி மற்றும் வட்டாட்சியர் சையத் காதர் முன்னி லையில் கல்லூரிக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டது.

பின்னர், எஸ்பி நாகஜோதி தலைமையிலான போலீஸார், ஏடிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம், டிஎஸ்பி அந்தோணி ஹரி மற்றும் சேலம் சிபிசிஐடி ஆய்வாளர் சாரதா, எஸ்ஐகள் விஜயலெட்சுமி, வளர்மதி ஆகியோர் கொண்ட 3 குழுவினர் நேற்று கல்லூரி மாணவிகள் தங்கி யிருந்த விடுதியான எம்ஆர்எம் அபார்ட்மென்ட், சேலம் சாலையில் உள்ள விடுதி, மாணவர்கள் விடுதி ஆகியவற்றை ஒரே நேரத்தில் ஆய்வு செய்தனர்.

மேலும், கச்சிராயப்பாளயம் சாலையில் உள்ள கல்லூரி தாளா ளர் வாசுகி வீட்டையும் சோதனை யிட்டனர். கல்லூரியின் அங்கீகாரம் தொடர்பான ஆவணங்கள், கல்விக் கட்டண ரசீதுகள், ஆய்வக வசதி கள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தனர். இவர்களுடன் விடுதி வார்டன்கள் சுமதி, லட்சுமி மற்றும் பேராசிரியர் கோடீஸ்வரி ஆகியோர் உள்ளனர். அவர்களிட மும் விசாரணை நடத்தப்பட்டது. கல்லூரியில் இருந்து சில ஆவணங் களை சிபிசிஐடி போலீஸார் கைப் பற்றினர்.

வாசுகி ஆஜர்

இதனிடையே, இந்த விசார ணையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி கள்ளக்குறிச்சி நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் மனு தாக்கல் செய்த னர்.

இந்நிலையில், கல்லூரி தாளா ளர் வாசுகியை சிபிசிஐடி காவ லில் வைத்து விசாரிக்க நேற்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஏடிஎஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் மனு தாக்கல் செய்தார். எனவே, கடலூர் சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாசுகி அழைத்து வரப் பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டார்.

அப்போது, சிபிசிஐடி மனுவை நீதிபதி சுபா அன்புமணி ஏற்றுக் கொண்டு வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை சிபிசிஐடி போலீஸ் காவலில் வாசுகியை விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து வாசுகி மகன் சுவாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, அம்பேத்கர் புரட்சி கழக நிறுவனர் பெரு வெங்கடேசன் ஆகியோரையும் சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே, அவர்கள் அனைவரும் இன்று (2-ம் தேதி) விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x