பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் நிலையில் முன் அறிவிப்பின்றி மூடப்பட்ட புதுவை சட்டப்பேரவை பின்வாசல்

பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் நிலையில் முன் அறிவிப்பின்றி மூடப்பட்ட புதுவை சட்டப்பேரவை பின்வாசல்

Published on

புதுவை சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதால் பாரதி பூங்கா அருகில் உள்ள சட்டப்பேரவை முன்பகுதி நுழைவு வாயில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், உயரதிகாரிகள் காரில் வந்து செல்லும் வகையில் திறக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் இந்த நுழைவு வாயிலில் வர முடியாது.

சட்டப்பேரவை பின்புறவாயில் வழியாக அரசு அதிகாரிகள், சட்டமன்ற ஊழியர்கள், பத்திரிகையாளர்கள் வந்து செல்ல வேண்டும். இந்த நடைமுறை சட்டப்பேரவை நடக்கும் நாட்களில் பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை 10 மணியள வில் திடீரென பின்புற வாயிலை மூடினர். அந்த வழியாக செல்வோர், முன்பக்க நுழைவு வாயிலுக்கு நடந்து வந்து சட்டப்பேரவைக்குள் வந்தனர். போலீஸார் அவர்களை தடுத்து கேள்விஎழுப்பினர். பின்பற வாயில் பூட்டிய தகவலை கூறி முன்புற வாசல் வழியாக சென்றனர்.

"பின்பக்க நுழைவு வாயில் வழியாக சட்டப்பேரவை பணியில் இல்லாதவர்கள், அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகளவில் நுழைவதாக சட்டப்பேரவைச் செயலருக்கு புகார் வந்ததால் வாயிலை மூடினோம்." என்று சட்டப்பேரவை தரப்பில் தெரிவித்தனர்.

இதுபற்றி இதர துறை அதிகாரிகள் கூறுகையில், " பின்புற நுழைவு வாயிலிலும் சட்டப்பேரவை காவலர்கள், போலீஸார் பணியில்உள்ளனர். அனுமதி சீட்டு வைத்திருப்பவர்களை அனுமதித்திருந்தால் மற்றவர்களை தடுத்தி ருக்கலாம். அதை விடுத்து முழுமையாக பின் புற கதவை பூட்டியது சரியான நடைமுறை இல்லை" என்று குறிப்பிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in