

தாம்பரம் ரயில் நிலைய யார்டில்பாராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கத்தில் சில மின்சார ரயில்களின் சேவைகள் இன்று (1-ம் தேதி) ரத்து செய்யப்படுகின்றன.
இதன்படி, கும்மிடிப்பூண்டி -செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில் (42502), சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்கள் (40523, 40525, 40527, 40529, 40531) மற்றும் செங்கல்பட்டு - கும்மிடிப்பூண்டி இடையே இயக்கப்படும் ரயில் (42501), செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே இயக்கப்படும் ரயில்கள் (40528, 40530, 40532, 40534, 40536) ஆகியவை தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இன்று ரத்து செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் - சென்னை கடற்கரை இடையே காலை 9.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40704), திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் (40804) சேவை இன்று முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது.