Published : 01 Sep 2021 03:17 AM
Last Updated : 01 Sep 2021 03:17 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

சென்னை

புதிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகியவற்றில் ஊரகஉள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இந்த 9 மாவட்டங்களில் ஊரகஉள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. சட்டப்பேரவை தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ள 19-3-2021-ல் வெளியிடப்பட்ட விவரங்களை அடிப்படையாகக் கொண்டு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பட்டியல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வாக்காளர் பதிவு அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டது.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண்கள் - 5,69,583, பெண்கள் - 5,85,163, மூன்றாம் பாலினம் - 187 என்று மொத்தம் 11,54,993 வாக்காளர்கள் உள்ளனர். காஞ்சிபுரத்தில் ஆண்கள் - 3,31,266, பெண்கள் - 3,50,387, மூன்றாம் பாலினம் - 78 என்று மொத்தம் 6,81,731வாக்காளர்களும், வேலூரில் ஆண்கள் - 3,48,898, பெண்கள் - 3,68,006, மூன்றாம் பாலினம் - 80 என்று மொத்தம் 7,16,984 வாக்காளர்களும் உள்ளனர். ராணிப்பேட்டையில் ஆண்கள் - 3,26,701, பெண்கள் - 3,40,498, மூன்றாம் பாலினம் - 38 என மொத்தம் 6,67,237 வாக்காளர்களும், திருப்பத்தூரில் ஆண்கள் - 3,29,959, பெண்கள் - 3,34,115, மூன்றாம் பாலினம் - 34 என மொத்தம் 6,64,108 வாக்காளர்களும் உள்ளனர்.

விழுப்புரத்தில் ஆண்கள் -6,87,420, பெண்கள் - 6,96,115,3-ம் பாலினம் - 152 என மொத்தம் 13,83,687 வாக்காளர்களும், கள்ளக்குறிச்சியில் ஆண்கள் - 4,83,772, பெண்கள் - 4,77,812, மூன்றாம் பாலினம் - 186 என மொத்தம் -9,61,770 வாக்காளர்களும் உள்ளனர். திருநெல்வேலியில் ஆண்கள் -3,30,487, பெண்கள் - 3,43,325,மூன்றாம் பாலினம் - 56 எனமொத்தம் 6,73,868 வாக்காளர்களும், தென்காசியில் ஆண்கள் - 3,69,438, பெண்கள் - 3,85,940,3-ம் பாலினம் - 24 என மொத்தம்7,55,402 வாக்காளர்கள் உள்ளனர்.

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளிலும் மொத்தம் 76 லட்சத்து 59 ஆயிரத்து 720 வாக்காளர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x