

செஞ்சி அடுத்த மணலபாடி மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவழகன் மனைவி துளசி என்பவர் தனது இரண்டு வயது குழந்தையை கொடூரமான முறையில் தாக்கிய வீடியோ அண்மையில் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து வடிவழகன் கொடுத்த புகாரின்பேரில் சத்தியமங்கலம் போலீஸார் துளசியை கைது செய்து கடலூர் சிறையில் அடைத் துள்ளனர்.
இத்தகவல் அறிந்த சிறுபான் மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேற்று முன்தினம் இரவு மோட்டூரில் உள்ள வடிவழகன் வீட்டிற்கு சென்று, குழந்தைகள் நலமாக உள்ளதா என நலம் விசாரித்து வடிவழகனுக்கு ஆறுதல் கூறி ரூ.10 ஆயிரம் தனது சொந்த நிதியை வழங்கி குழந்தைகளை பேணிகாக்குமாறு கூறினார்.