முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தஞ்சை, திருவாரூரில் 304 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: சீர்வரிசைப் பொருட்கள், பசு-கன்று அன்பளிப்பு

முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தஞ்சை, திருவாரூரில் 304 ஜோடிகளுக்கு இலவச திருமணம்: சீர்வரிசைப் பொருட்கள், பசு-கன்று அன்பளிப்பு
Updated on
1 min read

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 68-வது பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை, திருவாரூரில் 304 ஜோடிகளுக்கு நேற்று இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, சீர்வரிசைப் பொருட்கள், பசுவுடன் கன்று ஆகியவை வழங்கப்பட்டன.

தஞ்சை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் 164 ஜோடிகளுக்கு புதிய பேருந்து நிலைய மாநகராட்சித் திடலில் திருமணம் நடைபெற்றது. தமிழக வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தலைமை வகித்து, திருமணத்தை நடத்தி வைத்தார்.

இதில், தஞ்சாவூர் எம்எல்ஏ எம்.ரங்கசாமி, அதிமுக விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் துரை.கோவிந்தராஜன், எம்.பி.க்கள் கு.பரசுராமன், ஆர்.கே.பாரதி மோகன், எம்.ரத்தினவேல், ம.சந்திர காசி, மருதராஜா, எம்எல்ஏ-க்கள் ரா.துரைக்கண்ணு, எம்.ரத்தின சாமி, மணிவேல், இளம்பை.ரவிச் சந்திரன், அரியலூர் மாவட்டச் செயலாளர் தாமரை ராஜேந்திரன், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன், தஞ்சை மேயர் சாவித்திரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருவாரூரில்…

திருவாரூர் மாவட்ட அதிமுக சார்பில் வன்மீகபுரம் அம்மா அரங்கில் 140 ஜோடிகளுக்கு அதிமுக மாவட்டச் செயலாளரும், தமிழக உணவு மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான ஆர்.காமராஜ் நேற்று திருமணத்தை நடத்தி வைத்து, மணமக்களுக்கு 68 வகையான சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் கறவைமாடு ஆகியவற்றை வழங்கினார்.

இதில், அதிமுக அமைப்புச் செயலாளரும், எம்.பி.யுமான டாக்டர் கோபால், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எஸ்.ஆசைமணி, அதிமுக நகரச் செயலாளர் மூர்த்தி, திருவாரூர் மொத்த கூட்டுறவு விற்பனை சங்கத் தலைவர் எஸ்.கலியபெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

68 வகை சீர்வரிசை

ணமக்களுக்கு தலா 4 கிராம் தங்கத் தாலி, பட்டுப் புடவை, பட்டு வேட்டி-சட்டை, கட்டில், மெத்தை, பீரோ, டேபிள் பேன், காமாட்சி விளக்கு, குத்துவிளக்கு 2, மண்விளக்கு, படி, பித்தளை சொம்பு, தூபக்கால், தாம்பூலத் தட்டு, பூஜை மணி, பாய், ஜமுக்காளம், போர்வை, தலையணை 2, குக்கர், தோசைக்கல், பூரி டப்பா, குழிக்கரண்டி, தோசைத் திருப்பி, லோட்டா, டம்ளர் 2, ஜாடி, ஜக்கு, சோப்பு டப்பா, எவர்சில்வர் சொம்பு, பூரிக்கட்டை, கேரியர், குண்டான் 3, பால்கேன், முறுக்கு அச்சு, சல்லடை, கலர் சாஸ்பான், முறம், சாப்பாடு தட்டு 2, கடாய், டேக்ஸா 2, பூ வாளி, அரிவாள்மனை, இடுக்கி 1, தேங்காய் துருவி, ஊதாங்குழல், இட்லி பானை 1, சம்படம் 1, சில்வர் குடம், தவலை, ஹாட்பாக்ஸ், தாம்பாளத்தட்டு, குழித்தட்டு உள்ளிட்ட 68 வகையான சீர்வரிசைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in