

இந்தியன் ரயில் சேவை தொடர்பாக புகார்களை தெரிவிக்க புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நிர்வாகம் தொடர்பாக மக்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்க்க செல்போன் செயலியை ஏற்கெனவே அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அரசு தொடர்பாக தங்களுக்கு ஏற்படும் குறைகளை பொதுமக்கள் குறை நிவர்த்தி, கண்காணிப்பு (சிபிஜிஆர் ஏஎம்எஸ்) என்ற செயலியில் மக்கள் புகார் செய்யலாம். மக்களின் குறைகள் பதிவு செய்யப்பட்டு, பிறகு, அவர்களின் குறைகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த செயலியில் இந்திய ரயில்வே தொடர்பாக புகார்களை பதிவு செய்யும் வசதி நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன்மூலம் ரயில் பயணிகள் புகார்களை தெரிவிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.