Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.593 கோடியில் குடியிருப்பு, விடுதி, குடிநீர் திட்டப் பணிகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தமிழக உள்துறை, நகராட்சி நிர்வாகம், ஆதிதிராவிடர் நலத் துறைகள் சார்பில் ரூ.592.89 கோடி மதிப்பிலான காவலர் குடியிருப்பு கள், காவல், தீய ணைப்பு நிலையங்கள், விடுதிகள் உள்ளிட்ட திட்டப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடலூர், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, நீலகிரியில் ரூ.53.11 கோடியில் 359 காவலர் குடியிருப்பு கள் கட்டப்பட்டுள்ளன. சென்னை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சியில் ரூ.9.21 கோடி யில் 9 புதிய காவல் நிலைய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. கோவை, ஈரோடு, பெரம்பலூர், ராமநாதபுரம், நீலகிரியில் ரூ.6.60 கோடியில் துணை கண்காணிப் பாளர் முகாம் உள்ளிட்ட 5 கட் டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

கடலூர், ராமநாதபுரம், மதுரை, சேலம், திருவாரூர், திருச்சி, வேலூர், விழுப்புரத்தில் ரூ.12.64 கோடியில் 10 தீயணைப்பு நிலை யங்கள் கட்டப்பட்டுள்ளன. கன்னியா குமரி, நாகப்பட்டினம், திரு வண்ணாமலை, கோவை, தேனி யில் 5 புதிய தீயணைப்பு நிலை யங்கள், திருவாரூர், திருச்சியில் ரூ.5.42 கோடியில் தீயணைப்பு துறை பணியாளர்களுக்கு 30 குடி யிருப்புகள், சென்னை, திருச்சியில் ரூ.2.81 கோடியில் சிறைத் துறை பணியாளர்களுக்கான 16 குடி யிருப்புகள், சென்னை புழல் சிறை யில் ரூ.15.65 கோடியில் சிறைத் துறை துணை தலைவருக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

காவல், தீயணைப்பு துறையில் மொத்தம் ரூ.105.43 கோடி மதிப் பிலான கட்டிடங்களை முதல்வர் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

நகராட்சி நிர்வாகம்

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் வேலூர் மாநக ராட்சி பகுதிகளுக்கு ரூ.234.93 கோடி யில் குடிநீர் மேம்பாட்டு திட்டம், திருச்சி மாவட்டம் முசிறி, தாத்தையங்கார்பேட்டை, துறை யூர், உப்பிலியாபுரத்தில் ரூ.140.22 கோடியில் 293 குடியிருப்புகளுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50 குடியிருப்புகளுக்கு ரூ.28.24 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டங் களையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

நகராட்சி நிர்வாகம் சார்பில் மதுரை மாநகராட்சியில் ரூ.55.03 கோடியில் கடைகள், சுற்றுப்புறப் பூங்கா, எல்இடி அலங்கார விளக்கு கள், சேலம் மாநகராட்சியில் ரூ.19 கோடியில் வணிக வளாகம், உடற்பயிற்சிக் கூடம் என மொத்தம் ரூ.477.42 கோடி மதிப்பிலான திட்டங்களை முதல்வர் தொடங்கி வைத்தார்.

ஆதிதிராவிடர் நலத் துறை

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை சார்பில் கோயம்புத்தூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட் டங்களில் ரூ.10.04 கோடியில் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதி, ஆதிதிராவிடர் மாணவ, மாணவிகளுக்கான பள்ளி, கல்லூரி விடுதிகள் ஆகிய 8 கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வுகளில் அமைச்சர் கள் துரைமுருகன், கே.என்.நேரு, எஸ்.ரகுபதி, கயல்விழி செல்வ ராஜ், ஆர்.காந்தி, தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, உள்துறை செயலர் எஸ்.கே.பிரபாகர், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் சிவ்தாஸ் மீனா, ஆதிதிராவிடர் துறை செயலர் க.மணிவாசன், ஆணையர் சோ.மதுமதி, நக ராட்சி நிர்வாக இயக்குநர் பா.பொன்னையா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண் இயக்குநர் வி.தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x