Published : 31 Aug 2021 03:12 AM
Last Updated : 31 Aug 2021 03:12 AM

உயர் மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா பயணம்

மருத்துவ உயர் சிகிச்சை பெறுவதற்காக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் இருந்து நேற்றுதுபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வருகிறார். கட்சியின் முக்கிய நடவடிக்கைகள் மற்றும்மற்ற கட்சிகளின் தலைவர்கள் உடனான சந்திப்பில் மட்டும் பங்கேற்று வருகிறார். அதே நேரம்,மக்கள் பிரச்சினைக்காக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

உயர் மருத்துவ சிகிச்சைக்காக அவ்வப்போது வெளிநாட்டுக்கும் சென்று வருகிறார். கடந்த2018-ம் ஆண்டு அவர் அமெரிக்காசென்று சிகிச்சை பெற்றார். அதன்பிறகு, சென்னை மணப்பாக்கத்தில் இருக்கும் தனியார்மருத்துவமனையில் மாதம்தோறும் அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறை சென்று உடல் பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்.

இதற்கிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார். கடந்த 25-ம் தேதி தனது பிறந்தநாளை வீட்டிலேயே எளிமையாக கொண்டாடினார்.

தொடர் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொண்டு சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த், உயர் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.

சென்னையில் இருந்து நேற்று காலை விமானத்தில் துபாய் வழியாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். சக்கர நாற்காலியில் விமான நிலையத்துக்கு வந்த விஜயகாந்த் கோட், தொப்பி அணிந்திருந்தார். அவருடன் இளைய மகன்சண்முக பாண்டியனும் சென்றுள்ளார். அவர் நல்ல உடல்நலத்தோடு பழைய கம்பீரக் குரலோடு மீண்டும்வரவேண்டும் என கட்சித் தொண்டர்கள், அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x