

உளுந்தூர்பேட்டை அருகே அதிமுக சார்பில் நடந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பெண் ஒருவரை அமைச்சர் மோகன் தாக்கியதாகக் கூறப்பட்ட நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை அருகே உள்ள நகர் கிராமத்தில் திருநாவலூர் ஒன்றிய அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு, 680 பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடை பெற்றது. தெற்கு மாவட்டச் செயலாளர் கதிர் தண்டபாணி தலைமை வகித்தார். இதில், தமிழக ஊரக தொழில்துறை அமைச்சரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான மோகன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவுக்கு பெண்கள் உட்பட ஏராளமானோர் வந்த நிலையில் குறைந்த அளவிலான பயனாளி களுக்கு மட்டும் தையல் இயந்திரம், மருந்து தெளிக்கும் கருவி உட்பட விலை உயர்ந்த பொருட்கள் வழங் கப்பட்டது. இதையடுத்து, வசதி படைத்தவர்களுக்கு விலை உயர்ந்த பொருட்களை வழங்கு வதாகவும், ஏழை, எளிய பெண் களை பல மணி நேரத்துக்கு முன் வரவழைத்து கூட்டம் காட்டி விட்டு, இறுதியில் மலிவு விலை சேலைகளை வழங்கி ஏமாற்று வதாகவும் குற்றம்சாட்டி கூச்ச லிட்டனர்.
உடனே, அவர்களை மேடைக்கு வருமாறு அமைச்சர் மோகன் அழைத்ததால் அந்த பெண்கள் முண்டியடித்தபடி மேடையில் ஏறினர். ஆனால், நலத் திட்டம் வழங்குவது பற்றி விமர் சித்த ஒரு பெண்ணை அமைச்சர் மோகன் ஆவேசமாக பேசி அவரது கழுத்தில் கையை வைத்து தள்ள முயன்றாக கூறப்படுகிறது. அந்த பெண் விலகியதால் கீழே விழ வில்லை.
இதையடுத்து, அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டதால் அமைச்சர் மோகன், ராஜேந்திரன் எம்பி உள்ளிட்டோர் புறப்பட்டு சென்றனர்.