Published : 31 Aug 2021 03:13 AM
Last Updated : 31 Aug 2021 03:13 AM

தமிழகத்துக்கு செப்டம்பர் மாதத்தில் 1.04 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கீடு : ஓசூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகத்துக்கு செப்டம்பர் மாதம் 1.04 கோடி கரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓசூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியம் பாத்தகோட்டா கிராமத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணிகளை, சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து ஓசூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் அசோக் லேலண்ட் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியின்கீழ் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் உற்பத்தி மையத் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமை வகித்தார்.

ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைச்சர் திறந்து வைத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசின் தொகுப்பில் இருந்து கடந்த 2 மாதங்களாக 52 லட்சம், 57 லட்சம் என கரோனா தடுப்பூசிகள் வந்தன. தற்போது செப்டம்பர் மாதத்துக்கு 1 கோடியே 4 லட்சத்து 98 ஆயிரத்து 170 தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கீடுசெய்துள்ளது. முதல் தவணைசெலுத்திக் கொண்டு, 84 நாட்கள் கடந்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசிபோடப்படும். மலைக் கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள்தடுப்பூசி செலுத்தி கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படுவதால் ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும்முகாம் நடத்தப்பட்டு வருகிறது

பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கிராமங்கள்தோறும் சென்றுதடுப்பூசி குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

மக்களைத் தேடி மருத்துவத்திட்டம் சிறப்பாக செயல்படுத்துவதில் நாமக்கல் மாவட்டம் முதலிடத்திலும், கிருஷ்ணகிரி மாவட்டம் 2-வது இடத்திலும் உள்ளது. தமிழகத்தில் உள்ள 385 ஒன்றியங்களில்தற்போது 50 ஒன்றியத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. செப்டம்பர் மாத இறுதிக்குள்335 ஒன்றியங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தில் தற்போது நாள்தோறும் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்த மாதம் நாள்தோறும் 50 ஆயிரம் பேருக்கு மேல் பயன்பெறுவார்கள். விரைவில் 1 கோடி பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று மருந்து, மாத்திரை வழங்கப்படுவதன் மூலம் பயன்பெறுவார்கள். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x