

மகாமகம் திருவிழாவை முன் னிட்டு கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அரசு போக்குவரத்து அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர்.
கும்பகோணத்தில் வரும் 22-ம் தேதி மகாமகம் திருவிழா நடக்கிறது. இதையொட்டி பல்வேறு இடங்களில் இருந்து லட்சணக்கான மக்கள் வந்து செல்வார்கள். எனவே, தமிழகத் தின் முக்கியமான இடங்களில் இருந்து கும்பகோணத்துக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். எவ்வளவு சிறப்பு பேருந்துகள் இயக்குவது? டிக்கெட் முன்பதிவு வசதி உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது. சென்னையில் இருந்து சுமார் 400 முதல் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகள் கூறுகை யில், ‘‘மகாமகத்தை யொட்டி பல்வேறு இடங்களில் அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கவுள் ளோம். விழுப்புரம், கும்பகோணம், அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் சார்பில் அதிகளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும்’’என்றனர்.