

திமுக-வுடன் கூட்டணி குறித்த முடிவு நாளை (13-ம் தேதி) குலாம் நபி ஆசாத், கருணாநிதியை சந்தித்த பின்னர்தான் தெரியும் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரி வித்தார்.
ஈரோட்டில் நேற்று செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
ராகுல் காந்தியை சந்தித்து பேசிய பின்னர் தற்போது எல்லா தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்படுகிறது. சட்டப் பேரவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி என்பது இன்னும் முடி வாகவில்லை. மேலிட பிரதிநிதி யாக குலாம்நபி ஆசாத் நாளை (13-ம் தேதி) திமுக தலைவரை சந்தித்து பேசிய பின்னர்தான் எந்த ஒரு முடிவும் தெரியவரும் என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் திமுக கூட்டணியில் இருந்து வெளியே வந்தபோது விடுதலை கிடைத்ததாக கூறினீர் களே என்று கேட்டதற்கு அந்த சூழ்நிலையில் நான் சொல்லிய கருத்து. இப்போதுள்ள சூழ் நிலைக்கு அது ஏற்புடையது அல்ல. நான் பல கருத்துகளை, பல சூழ்நிலைகளில் சொல்லி இருக்கிறேன். சூழ்நிலைக்கு ஏற்ப சொல்வதும், சிந்திப்பதும்தான் மனித தன்மை.
50 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்ப்பு குறித்து திமுகவினர் ஏற்கெனவே ஆதாரபூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் தெரி வித்து, தேர்தல் ஆணையம் 1.40 லட்சம் போலி வாக்காளரை நீக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர். மீதம் உள்ள போலி வாக்காளர் களை விரைவில் நீக்குவார்கள் என நம்புகிறோம். அவசியம் ஏற்பட்டால் நீதிமன்றம் செல்வோம்.
கெயில் திட்டத்தை காங்கிரஸ் கொண்டு வந்தாலும், நிலம் பறிப்பால் விவசாயிகள் பாதிக்கப் படுகிறார்கள் என்று தெரிந்தவுடன் அதை நிறுத்தி வைத்தோம். அப்போது தமிழக அரசு திட்டத்துக்கு தடை போட்டாலும், அதை மீறி எங்களால் செயல்படுத்தி இருக்க முடியும். விவசாயிகளுக்கு கேடு விளைவிக்கிறது என்பதால் நிறுத்தி வைத்தோம்.
தேர்தல் பணிகளில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கிறார்களோ இல்லையோ, தொண்டர்கள் உற்சாகமாக பங்கேற்கின்றனர். எனக்கு தலைவர்கள் தேவையில்லை என்றார்.