நாட்றம்பள்ளி அருகே எரி கல் விழுந்ததாக தகவல்: தனியார் பொறியியல் கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார் - தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு

நாட்றம்பள்ளி அருகே எரி கல் விழுந்ததாக தகவல்: தனியார் பொறியியல் கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார் - தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு
Updated on
1 min read

நாட்றம்பள்ளி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் எரி கல் வெடித்ததாக கூறப்படும் விவகாரத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் காய மடைந்தனர். கல்லூரிப் பேருந்து மற்றும் வகுப்புகளின் கண்ணாடி கள் நொறுங்கின. இது தொடர்பாக தடய அறிவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து, போலீஸ் தரப்பில் கூறியதாவது: வேலூர் மாவட்டம் நாட்றம் பள்ளி அருகே கே.பந்தாரப் பள்ளி என்ற கிராமத்தில் பாரதி தாசன் பொறியியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு வெள் ளேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் (48) என்பவர் கல்லூரி யின் பேருந்து ஓட்டுநராக பணி யாற்றினார்.

இவர் தோட்டத்தில் உள்ள தண் ணீர்த் தொட்டியில் முகம், கை, கால்களை கழுவ நேற்று பகல் 12.30 மணியளவில் சென்றார். அப்போது, பயங்கர வெடிச் சத்தம் சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு கேட்டது. தோட்டத்துக்கு அருகே நிறுத்தியிருந்த 7 கல்லூரிப் பேருந் துகளின் கண்ணாடிகள் நொறுங் கின. கல்லூரியின் 2-வது மாடிக் கட்டிடத்தில் இருந்த வகுப்பறை ஜன்னல் கண்ணாடிகளும் நொறுங்கின.

சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அப் போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் காமராஜ் கீழே விழுந்து கிடந்தார். அருகில், தோட்டப் பரா மரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண் டிருந்த ஏலகிரி கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார் (42), பூசணி வாய் வட்டம் கிராமத்தைச் சேர்ந்த முரளி (26), ஆம்பூர் சின்னவரிகம் கிராமத்தைச் சேர்ந்த சுல்தான் (57) மற்றும் நாட்றம்பள்ளி எல்லம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு மாணவர் சந்தோஷ் (20) ஆகியோர் காயமடைந்தனர்.

அவர்கள் அனைவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு மருத் துவமனைக்கு அனுப்பினர். சிகிச்சைக்கு செல்லும் வழியி லேயே காமராஜ் உயிரிழந்தார். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தகவலையடுத்து வேலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால், காவல் கண்காணிப்பாளர் செந்தில் குமாரி, வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் வனிதா, நாட்றம்பள்ளி வட்டாட்சியர் செல்வராஜ் ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

சம்பவ இடத்தில் சுமார் 3 அடி அகலம் 2 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டிருந்தது. வானத் தில் இருந்து விழுந்த எரி கல் வெடித்தாக கல்லூரி மாணவர் களும் ஊழியர்களும் தெரிவித் தனர். தடய அறிவியல் உதவி இயக்குநர் பாரி தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in