மத்திய அரசு வழங்கியது போல் அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கு.பாலசுப்ரமணியன் வேண்டுகோள்

விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

மத்திய அரசு வழங்கியதுபோல் 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் சிறப்புத்தலைவர் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்பு ரத்தில் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். மாநிலத் தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கோபிநாதன், அமைப்பு செயலாளர் சிவக்குமார், மாவட்டதலைவர் ஜெய்கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் கலந்து கொண்ட சங்கத்தின் சிறப்புத்தலைவர் கு.பாலசுப்ரமணியன் செய்தி யாளர்களிடம் கூறியது:

மத்திய அரசு வழங்கியதுபோல் 11 சதவீதம் அகவிலைப்படி உயர்வை பொருளாதார, சமூக காரணங்களை காட்டாமல் கடந்த ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு உயர்த்தி வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். ஓய்வூதியம் இல்லாத அரசு மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிடவேண்டும். தினக்கூலி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்பி, அவுட்சோர்சிங் முறையை ஒழித்திட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசுத் துறையில் பணியாற்று பவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000ம், ஓய்வூதியம் ரூ.10,000 வழங்கிடவேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பர் 8-ம் தேதி தமிழகம் முழுவதும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடக்கிறது. பின்னர் ஆட்சியர் மூலம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அளிக்க உள்ளோம் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in